ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறிய பேருந்து விபத்து - 7 பேர் பலி, 19 பேர் படுகாயம்

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 26 பேர் பயணம் செய்துள்ளனர். 

இன்று மதியம் பாலி மாவட்டம் காயின்பூரா கிராசிங் அருகே சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி பேருந்து தாறுமாறாக ஓடியது. 

பின்னர் சிறிது நேரத்தில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பேருந்தின் மீது மோதியது. 

4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 19 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு பாலி வைத்தியசாலையில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். 

மேலும் அதிவேகமாக ஓட்டிய பேருந்தின் ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறிய பேருந்து விபத்து - 7 பேர் பலி, 19 பேர் படுகாயம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறிய பேருந்து விபத்து - 7 பேர் பலி, 19 பேர் படுகாயம் Reviewed by Vanni Express News on 3/06/2019 11:23:00 PM Rating: 5