ஆசிரியர் பயிற்சி கல்லூரியை சேர்ந்தவர்கள் சென்ற சுற்றுலா பஸ் விபத்து - 30 பேருக்கு மேல் காயம்

அட்டாளைசேனை ஆசிரியர் பயிற்சி  கல்லூரியை சேர்ந்தவர்கள் சென்ற சுற்றுலா பஸ் கடுகண்ணாவ பிரதேசத்தில் விபத்து.

கடுகண்ணாவ – அம்பலம பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 30 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளனர்.

அட்டாளைசேனை ஆசிரியர் பயிற்சி  கல்லூரியை சேர்ந்தவர்கள் சென்ற சுற்றுலா பஸ்ஸே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகி உள்ளது. 

இச்சம்பவம் இன்று இரவு 9:15 க்கு இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் மாவனல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதியால் பஸ்சை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
ஆசிரியர் பயிற்சி கல்லூரியை சேர்ந்தவர்கள் சென்ற சுற்றுலா பஸ் விபத்து - 30 பேருக்கு மேல் காயம் ஆசிரியர் பயிற்சி கல்லூரியை சேர்ந்தவர்கள் சென்ற சுற்றுலா பஸ் விபத்து - 30 பேருக்கு மேல் காயம் Reviewed by Vanni Express News on 3/05/2019 11:29:00 PM Rating: 5