மாணவர்கள் குழு சுற்றுலா சென்ற பேருந்து விபத்து ஒருவர் பலி - 38 மாணவர்கள் காயம் - மூவரின் நிலமை கவலைக்கிடம்

அக்கறைபற்று, அட்டாளைச்சேனை பகுதியில் இருந்து பேருவளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மாவனல்லை, பஹல கடுகண்ணாவை பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 38 பேர் காயமடைந்துள்ளனர். 

வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் வளைவுடன் கூடிய பகுதியில் பள்ளத்தில் விழுந்ததில் நேற்று (05) இரவு 9.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஆசிரியர் பயிற்சி கலாசாலையையில் கல்வி பயிலும் மாணவர்கள் குழு ஒன்று பேருவளை பகுதிக்கு சுற்றுலா சென்ற கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது. 

விபத்து இடம்பெற்ற சந்தப்பத்தில் பேருந்தினுள் 54 பேர் இருந்துள்ளதுடன் அதில் 38 பேர் காயமடைந்துள்ளனர். 

22 மற்றும் 23 வயதிற்கு உட்பட்டவர்களே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் காயமடைந்தவர்கள் மாவனல்லை மற்றும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அக்கறைப்பற்று பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பேருந்து உதவியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அத்துடன் காயமடைந்தவர்களில் மூவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
மாணவர்கள் குழு சுற்றுலா சென்ற பேருந்து விபத்து ஒருவர் பலி - 38 மாணவர்கள் காயம் - மூவரின் நிலமை கவலைக்கிடம் மாணவர்கள் குழு சுற்றுலா சென்ற பேருந்து விபத்து ஒருவர் பலி - 38 மாணவர்கள் காயம் - மூவரின் நிலமை கவலைக்கிடம் Reviewed by Vanni Express News on 3/06/2019 02:20:00 PM Rating: 5