வேன் ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் மோதி விபத்து - ஒருவர் பலி - மூவர் காயம்

ஜாலியகொட - கெஸ்பாவ மாற்று வீதியின் கொட்டாவ சமிஞ்ஞைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். 

இன்று (07) அதிகாலை வேன் ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் வாகன ஓட்டுனர் உட்பட அதில் பயணித்த மூவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்த 47 வயதுடைய மோட்டார் வாகன ஓட்டுனரின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

விபத்து தொடர்பில் பிலியந்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேன் ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் மோதி விபத்து - ஒருவர் பலி - மூவர் காயம் வேன் ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் மோதி விபத்து - ஒருவர் பலி - மூவர் காயம் Reviewed by Vanni Express News on 3/07/2019 01:55:00 PM Rating: 5