லொறி ஒன்றும் எதிர் திசையில் வந்த கெப் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி

கொட்டவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்புறுகமுவ பிரதேசத்தின் காலி - மாத்தறை பிரதான வீதியில் மாத்தறை நோக்கி சென்ற லொறி ஒன்றும் எதிர் திசையில் வந்த கெப் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த கெப் வண்டியில் பயணித்த இருவர் மற்றும் லொறியின் சாரதி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் கெப் வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், நலகஹவத்தை, போத்தல, காலி என்ற விலாசத்தைச் ​ சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். 

சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொட்டவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
லொறி ஒன்றும் எதிர் திசையில் வந்த கெப் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி லொறி ஒன்றும் எதிர் திசையில் வந்த கெப் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி Reviewed by Vanni Express News on 3/09/2019 11:20:00 PM Rating: 5