டிப்ளோமா பட்டதாரிகளுக்கு விண்ணப்பம் கோர மத்தி அனுமதி அங்கஜன்

வடமாகாணத்தின் அசமந்த போக்கின் காரணமாக தடைப்பட்டிருந்த டிப்ளோமா பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கு, விண்ணப்பங்களை கோர வட மாகாணத்திற்கு, மத்தி அனுமதி

ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் துரித உயர்மட்ட செயற்பாட்டு முயற்சியின் பலனாக மத்திய அரசினால் வடமாகாணத்திற்கான விண்ணப்பங்களை கோருவதற்க்கான அனுமதிகள் மத்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வடமாகாண உடற்கல்வி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்களுக்கான விண்ணப்பங்களும், பகுதி நேர ஆங்கில ஆசிரியர்களும் இவ் நடைமுறையின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

இதே வேளை மீன்பிடிதுறைக்கான டிப்ளோமா பயின்ற கற்கை நெறியாளர்களும் இதன் மூலம் உள்வாங்கப்பட உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்தார்.
டிப்ளோமா பட்டதாரிகளுக்கு விண்ணப்பம் கோர மத்தி அனுமதி அங்கஜன் டிப்ளோமா பட்டதாரிகளுக்கு விண்ணப்பம் கோர மத்தி அனுமதி அங்கஜன் Reviewed by Vanni Express News on 3/06/2019 12:18:00 PM Rating: 5