ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டங்களின், யாழ் மாவட்டதிற்கு அங்கஜன் இராமநாதன்

- ஊடகப்பிரிவு

ஜனாதிபதி அலுவலகத்தினால்  தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பிரதான செயற்திட்டங்களை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் செயற்படுத்துவதற்கான பிரதான ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம்  பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசணைக்கு அமைவாக இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

கிராம சக்தி, போதைபொருள் தடுப்பு, சிறுவர் பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு, தேசிய உணவு உற்பத்தி, ஸ்மார்ட் ஶ்ரீ சிறிலங்கா மற்றும் நிலைபேறான நோக்கு உள்ளிட்ட தேசிய ரீதியான செயற்திட்டங்களின் ஒருங்கிணைப்புக்கள்  நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களிடம்  கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டங்களின், யாழ் மாவட்டதிற்கு அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டங்களின், யாழ் மாவட்டதிற்கு அங்கஜன் இராமநாதன் Reviewed by Vanni Express News on 3/07/2019 11:39:00 AM Rating: 5