யாழ் மாநகர பொது மக்களுக்கான (வர்த்தகர்கள்) பொது அறிவித்தல்

- ஊடக அறிக்கை முதல்வர் செயலகம் யாழ் மாநகர சபை

யாழ் மாநகர எல்லைக்குள் இயங்கிவரும்; வர்த்தக நோக்கிலான விடுதிகள், தங்குமிடங்கள், பிரத்தியேக தங்குமிட வீடுகள், தனியார் கல்வி நிலையங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் உணவகங்கள் என்பவற்றை இதுவரை பதிவு செய்யாதவர்கள், உரிமக் கட்டணங்கள் செலுத்தாதவர்கள், கட்டணங்ளை செலுத்த தவறியவர்கள் மற்றும் அந்தந்த நிறுவனங்களுக்குரிய மாநகரின் நியமங்களை பின்பற்றத் தவறியவர்கள் மாநகரசபையின் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக தங்களையும், தங்கள் வியாபார மற்றும் சேவை நிலையங்களை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் (2019.03.31) பதிவு செய்து கொள்ளுமாறு இத்தால் அறிவுறுத்தப்படுகின்றீர்கள். 

இப்பதிவு நடவடிக்கைகள் தொடர்பாக மாநகரசபையின் 2018.09.28 ஆம் திகதிய ஆறாவது (6) மாதாந்தப் பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு மாநகர வர்த்தகர்களுக்கும் சேவை வழங்குனர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டும் இதுவரை முறையாக முழுமையாக பின்பற்றப்படாமை கண்டறியப்பட்டுள்ளமையினால் மீண்டும் நினைவூட்டப்படுகின்றது.

மாநகரசபையின் இந் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு இம்மாத இறுதி 31ஆம் திகதிக்குள் நடைமுறைப்படுத்த தவறுபவர்களுக்கு எவ்வித கருணையும், சலுகையும், கருணைக்காலமும் வழங்கப்படமாட்டாது என்பதை கண்டிப்புடன் அறியத்தருவதோடு தவறுபவர்கள் தகுந்த சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்ற மாநகரசபையின் அறிவுறுத்தலை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன். 

இவ்வண்ணம்
இம்மானுவல் ஆனல்ட்
முதல்வர்
மாநகரசபை - யாழ்ப்பாணம். 
யாழ் மாநகர பொது மக்களுக்கான (வர்த்தகர்கள்) பொது அறிவித்தல் யாழ் மாநகர பொது மக்களுக்கான (வர்த்தகர்கள்) பொது அறிவித்தல் Reviewed by Vanni Express News on 3/13/2019 04:21:00 PM Rating: 5