ரத்கம வியாபாரிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் - மேலும் இரு பொலிஸார் கைது

ரத்கம வியாபாரிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று (05) குறித்த அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தென் மாகாண விஷேட விசாரணைப்பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று (06) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போத அவர்கள் இருவரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ரத்கம வியாபாரிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் - மேலும் இரு பொலிஸார் கைது ரத்கம வியாபாரிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் - மேலும் இரு பொலிஸார் கைது Reviewed by Vanni Express News on 3/06/2019 02:29:00 PM Rating: 5