161 கிலோ ஹெரோயின் மற்றும் 5000 தோட்டக்களுடன் இருவர் கைது

மொரட்டுவ, ராவதா வத்த பகுதியில் 161 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இன்று (11) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாகந்துர மதூஷின் குழு உறுப்பினர் ஒருவரின் உதவியளரான ´கெவுமா´ என்பவரின் வீட்டில் இருந்த குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த வீட்டில் இருந்து 5000 இற்கு அதிகமான ரி 56 ரக துப்பாக்கிக்கான தோட்டக்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வருகின்றனர்.
161 கிலோ ஹெரோயின் மற்றும் 5000 தோட்டக்களுடன் இருவர் கைது 161 கிலோ ஹெரோயின் மற்றும் 5000 தோட்டக்களுடன் இருவர் கைது Reviewed by Vanni Express News on 3/11/2019 05:54:00 PM Rating: 5