மதுபானத்திற்கான உற்பத்தி வரி அதிகரிப்பு

750 மில்லி லீட்டர் வன் மதுபான போத்தல் ஒன்றிற்கான உற்பத்தி வரி 63 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 330 மில்லி லீட்டர் பியர் போத்தல் ஒன்றிற்கான உற்பத்தி வரி 9 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

வருடாந்த பண வீக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பவற்றின் அடிப்படையிலான சுட்டியொன்றினை அடிப்படையாகக் கொண்டு ஆகக் குறைந்த வருடாந்த உற்பத்தித் தீர்வை கணிப்பீடு செய்யப்படுவதோடு 2019 மார்ச் 06 ஆம் திகதி முதல் விலைச்சுட்டியின் அடிப்படையில் திருத்தப்படும். 

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வன் மதுபானங்கள் மீதான மதுவரி 8 சதவீதத்தினாலும் பாகு மதுமானம் மீதான உற்பத்தித் தீர்வை 12 சதவீதத்தினாலும் வருடாந்த பண வீக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பவற்றின் அடிப்படையிலான சுட்டியொன்றினை அடிப்படையாகக் கொண்டு ஆகக் குறைந்த வருடாந்த தீர்வை கணிக்கப்படும். 

விசேட சாராயத்திற்கான உற்பத்தித் தீர்வையானது தொடர்ந்து மாறாதிருக்கும்.
மதுபானத்திற்கான உற்பத்தி வரி அதிகரிப்பு மதுபானத்திற்கான உற்பத்தி வரி அதிகரிப்பு Reviewed by Vanni Express News on 3/05/2019 09:04:00 PM Rating: 5