சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 12 ஆம் திகதி மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. 

இதனை தொடர்ந்து வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

இந்த விவாதம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. 

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் Reviewed by Vanni Express News on 3/06/2019 12:04:00 PM Rating: 5