பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் 800 ccக்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 150,000 ரூபாவினாலும், 1000 ccக்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 175,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளது. 

அத்துடன் 1300 ccக்கு குறைந்த பெற்றோல் வாகனுங்களுக்கான இறக்குமதி வரி 500,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, 200 cc முச்சக்கர வண்டிகளுக்கு 60,000 ரூபா இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கிலோ வோட் 70 மின்சார மோட்டார் இலத்திரனியல் வாகனங்களுக்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பபட்டுள்ளது.
பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு Reviewed by Vanni Express News on 3/05/2019 09:13:00 PM Rating: 5