நான் இறந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் செல்லமாட்டேன் - சந்திரிக்கா

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் நடாத்தப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் போது கூட்டத்திலிருந்து வெளியேறிச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி வருவதற்கு முன்னர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, ஜனாதிபதி மைத்திரிபால கூட்டத்துக்கு வருகை தரும்போது வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்றதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். நான் இறந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் செல்லமாட்டேன். இதன்பிறகு யாராவது என்னை ஐ.தே.க.யுடன் தொடர்புபடுத்திப் பேசினால் அவர் என்னிடம் அடிவாங்க தயாராக வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் உரையாற்றுகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மேலும் குறிப்பிட்டார்.  
நான் இறந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் செல்லமாட்டேன் - சந்திரிக்கா நான் இறந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் செல்லமாட்டேன் - சந்திரிக்கா Reviewed by Vanni Express News on 3/09/2019 12:45:00 PM Rating: 5