சிலாவத்துறை கடற்படை முன்பாக நாளை மாபெரும் மக்கள் எழுச்சிப்பேரணி

வடமாகாண முஸ்லிம்களின் தாயகமான முசலிப் பிரதேசத்தின் தலை நகரம் சிலாவத்துறை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இன்று வரை மீளப்பெற முடியாதது மட்டுமன்றி, அதனை சுவீகரிக்கின்ற பணிகளையும் பாதுகாப்பு தரப்பு துரிதப்படுத்துகின்றது.

எனவே நமது தாயக பூமியை மீட்டெடுக்கும் சாத்வீக ரீதியான தார்மீகப் போராட்டத்தை சிலாவத்துறை மக்கள் கடந்த 20.02.2019 முதல் தொடராக நடாத்தி வருகின்றனர்.

எமது மக்களின் உரிமைப் போராட்டத்தில் கலந்துகொள்வது எம் அனைவரின் மீதும் கடமையாகும். அந்த வகையில் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கிலும், நமது தாயக பூமியை மீட்டெடுக்கும் நோக்கிலும் மாபெரும் மக்கள் எழுச்சிப்பேரணி ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளோம்.

இப்பேரணியில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.

காலம் - 15.03.2019 வெள்ளிக்கிழமை.
நேரம் - ஜும்ஆ முடிந்தவுடன் 2.00 மணிக்கு.
இடம் - சிலாவத்துறை கடற்படை முன்பாக.

அணி திரண்டு ஆதரவு தாரீர் - ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்
சிலாவத்துறை கடற்படை முன்பாக நாளை மாபெரும் மக்கள் எழுச்சிப்பேரணி சிலாவத்துறை கடற்படை முன்பாக நாளை மாபெரும் மக்கள் எழுச்சிப்பேரணி Reviewed by Vanni Express News on 3/14/2019 05:59:00 PM Rating: 5