சிலாவத்துறை மக்களின் இன்றைய பேரணிப் பிரகடனம்

இலங்கைப் பிரஜைகளாகிய சிலாவத்துறை மக்கள் 2019 மார்ச் 15 ஆம் திகதி சிலாவத்துறை நகரில் இடம்பெறுகின்ற மண்மீட்புப் போராட்டப் பேரணியில் விடுக்கும் பிரகடனம்

1990 ஆம் ஆண்டு நாம் சிலாவத்துறையிலிருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டோம்.

2007 ஆம் ஆண்டு எமது குடியிருப்புக் காணிகளை கடற்படையினர் தம்வசப்படுத்தியுள்ளனர்.

இலங்கை அரசியலமைப்பின் 14/1 உறுப்புரையின்படி கடற்படையினர் எமது குடியிருக்கும் உரிமையை மீறியுள்ளனர்.

2009 முதல் சிலாவத்துறை மக்கள் கௌரவமான முறையில் மீள்குடியேற முடியாமல் அவதியுறுகின்றனர், அமைதியற்றிருக்கின்றனர்.

எமது நிலத்திற்கு பதிலாக எமக்கு நஷ்டஈடோ அல்லது வேறு எந்த மாற்றீடோ வேண்டாம்.

சிலாவத்துறையிலிருந்து கடற்படையினர் வேறு இடத்திற்கு நகர வேண்டும்.

சிலாவத்துறை எமது பூர்வீக பூமி.

எமது நிலம் எமக்கு வேண்டும்.
எமது நிலம் எமக்கு வேண்டும்.
எமது நிலம் எமக்கு வேண்டும்.

சிலாவத்துறை மக்கள்
சிலாவத்துறை மக்களின் இன்றைய பேரணிப் பிரகடனம் சிலாவத்துறை மக்களின் இன்றைய பேரணிப் பிரகடனம் Reviewed by Vanni Express News on 3/15/2019 06:27:00 PM Rating: 5