சிலாவத்துறை மண்மீட்புப் போராட்டத்துக்கு முசலி பிரதேச சபை ஆதரவு - தவிசாளர் சுபிஹான்

முசலி பிரதேச சபையின் 13வது அமர்வின் போது முசலி பிரதேசபைக்குட்பட்ட சிலாவத்துரை கடற்படையினரால் ஆக்கிரமிப்புக்குள்ளான காணியை விடுவித்து மக்களின் பாவனைக்கு கையளிக்கும் தீர்மானம் தவிசாளர் சுபிஹான் தலைமையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கிகரித்ததுடன் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தீர்மானம் எடுக்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமர்வின் போது கலந்துரையாடப்பட்டது.

மேலும் இன மதத்துக்கு அப்பால் 21 நாட்களாக முசலி பிரதேசத்தில் இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றது. 

இந்த முசலி பிரதேசத்தில் 32 கிராமங்களுக்கும் தலைநகராக சிலாவத்துறை நகர் காணப்படுகிறது இந்த நகரில் அமைந்துள்ள இந்த கடற்படை முகம் அகற்றப்படவேண்டிய தேவைப்பாடு உள்ளது. 

இதனை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு எமது பிரதேச மக்கள் சார்பாக முசலி பிரதேச சபை முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
சிலாவத்துறை மண்மீட்புப் போராட்டத்துக்கு முசலி பிரதேச சபை ஆதரவு - தவிசாளர் சுபிஹான் சிலாவத்துறை மண்மீட்புப் போராட்டத்துக்கு முசலி பிரதேச சபை ஆதரவு - தவிசாளர் சுபிஹான் Reviewed by Vanni Express News on 3/14/2019 10:14:00 PM Rating: 5