350 சிக்ஸ் அடித்த முதல் இந்தியர் - எம்எஸ் டோனி சாதனை!

இந்தியா - அவுஸ்திரேலியா இடையிலான 2 வது ரி20 கிரிக்கெட் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. 

இதில் எம்எஸ் டோனி 23 பந்தில் 40 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் தலா மூன்று பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் விளாசினார். 

முதல் சிக்ஸை அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 350 சிக்ஸரை பதிவு செய்தார். இதன்மூலம் 350 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மொத்தமாக 352 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ரோகித் சர்மா 349 சிக்ஸர்களும், சச்சின் தெண்டுல்கர் 264 சிக்ஸர்களும், யுவராஜ் சிங் 249 சிக்ஸர்களும், சவுரவ் கங்குலி 246 ஓட்டங்களும் அடித்துள்ளனர். 

சர்வதேச அளவில் கிறிஸ் கெய்ல் முதல் இடத்திலும், ஷாகித் அப்ரிடி 2 வது இடத்திலும், மெக்கல்லாம் 3 வது இடத்திலும், எம்எஸ் டோனி 4 வது இடத்திலும், ஜெயசூர்யா 5 வது இடத்திலும், ரோகித் சர்மா 6 வது இடத்திலும் உள்ளனர்.
350 சிக்ஸ் அடித்த முதல் இந்தியர் - எம்எஸ் டோனி சாதனை! 350 சிக்ஸ் அடித்த முதல் இந்தியர் - எம்எஸ் டோனி சாதனை! Reviewed by Vanni Express News on 3/01/2019 04:20:00 PM Rating: 5