நான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்எலிசபத் மைதானத்தில் இன்று இடம்பெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. 

இலங்கை அணி சார்பாக இசுறு உதான 78 ஓட்டங்களையும், அவிஷ்க 29 ஓட்டங்களையும் பெற்றனர். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 32.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
நான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி நான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி Reviewed by Vanni Express News on 3/13/2019 11:24:00 PM Rating: 5