தென் ஆபிரிக்கா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. 

இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 40.3 ஓவர் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

இலங்கை அணி சார்பாக குஷல் மெண்டிஸ் 56 ஓட்டங்களையும், பிரியமால் பெரேரா 33 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். . 

இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய இசுறு உதான 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். 

இதன்படி தென் ஆபிரிக்கா அணிக்கு 226 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

பதிலுக்கு தென் ஆபிரிக்கா அணி துடுப்பெடுத்தாடிய போது மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது. 

போட்டி 28 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு போது தென் ஆபிரிக்கா அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்தது. 

பின்னர் டக்வர்ட் லுவிஸ் முறைப்படி தென் ஆபிரிக்கா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

அதனடிப்படையில் தென் ஆபிரிக்கா அணி 5 - 0 என்ற ரீதியில் தொடரை கைப்பற்றியது
தென் ஆபிரிக்கா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி தென் ஆபிரிக்கா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி Reviewed by Vanni Express News on 3/17/2019 12:44:00 PM Rating: 5