விமானம் விழுந்து விபத்து 157 பேர் பலி - சோக சம்பவம்

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரில் இருந்து 157 பேருடன் கென்யாவின் நைரோபி நோக்கிச் சென்ற போயிங் 737 விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்து, தகவல் தொடர்பை இழந்தது. 

இதனையடுத்து, விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாகவம் விபத்து நேரிட்ட இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறதாகவும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை எத்தியோப்பிய பிரதமர் அலுவலகமும் விபத்தை உறுதி செய்துள்ளது. 

விமானத்தில் 149 பயணிகள் இருந்துள்ளதுடன் விமானிகள் மற்றும் பணியாளர்கள் என 8 பேர் இருந்துள்ளனர்.
விமானம் விழுந்து விபத்து 157 பேர் பலி - சோக சம்பவம் விமானம் விழுந்து விபத்து 157 பேர் பலி - சோக சம்பவம் Reviewed by Vanni Express News on 3/10/2019 05:15:00 PM Rating: 5