யாத்திரைக்கு சென்ற நபர் இன்று அதிகாலை திடீர் மரணம்

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற நபர் ஒருவர் இன்று அதிகாலை திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கண்டி -தவுலகல பிரதேசத்தினை சேர்ந்த 45 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான அவர் ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் என காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது யாத்திரைக்கு வந்திருந்தவர்கள் குறித்த நபரை உடனடியாக மஸ்கெலிய மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
யாத்திரைக்கு சென்ற நபர் இன்று அதிகாலை திடீர் மரணம் யாத்திரைக்கு சென்ற நபர் இன்று அதிகாலை திடீர் மரணம் Reviewed by Vanni Express News on 3/16/2019 01:10:00 PM Rating: 5