haiiii

நெய் எனக்கூறி மிருகக்கொழுப்பை விற்றுவந்த வர்த்தகர் மடக்கி பிடிப்பு

- ஊடகப்பிரிவு

நெய் எனக்கூறி மிருகக்கொழுப்பை விற்றுவந்த வர்த்தகர் மடக்கி பிடிப்பு - அபராதம் விதிக்கப்பட்டதோடு போலி நெய்யை அழிக்குமாறும் நீதவான் உத்தரவு!

நெய் என்று கூறி வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிருக கொழுப்பை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால்  மடக்கி பிடிக்கப்பட்டு வத்தளை  நீதி மன்றத்தினால் இன்று (08) அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வத்தளையை சேர்ந்த இந்த வர்த்தகருக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, வத்தளை நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் அதிகார சபை சட்டத்திற்கு அமைவாக 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதோடு அவர் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த போலி நெய்யை  அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைக்கப் பெற்ற நம்பகரமான தகவலின் அடிப்படையில் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்  எம்.எஸ்.எம்.பௌசரின் பணிப்புரைக்கமைய, இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.அதிகார சபை அதிகாரிகள்  சுற்றிவளைத்து  இந்த வர்த்தகரை மடக்கிப்பிடித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து பத்து வருடங்களுக்கு மேலாக இறக்குமதி செய்யப்படும்  99 சதவீதம்  உண்ணக்கூடியதென குறிப்பிடப்படும்  இந்த மிருக கொழுப்பு புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மிருக கொழுப்பை கொள்வனவு செய்தே  இந்த குறிப்பிட்ட வத்தளையை சேர்ந்த வர்த்தகர் 4.5 லீட்டர் கொள்ளளவு உள்ள கொள்கலனில் அதனை அடைத்து  நெய் என குறிப்பிட்டு போலியாக  விற்பனை செய்து வந்தமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. 

அவுஸ்திரேயாவிலிருந்து மிருக கொழுப்பை இறக்குமதி செய்யும் பிரபலமான நிறுவனம், கொழும்பு புறக்கோட்டை வியாபாரிகளுக்கு இதனை விற்பனை செய்து வந்துள்ளது. இந்த வியாபாரிகளிடமிருந்தே வத்தளை வர்த்தகர் இதனை கொள்வனவு செய்து பாம் எண்ணெய் யுடன் கலந்து நெய் என விற்பனை செய்து வந்தமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இருந்து 18 லீட்டர் கொள்ளளவான கலனில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த மிருக கொழுப்பு உள்நாட்டில் 4 1/2 லீட்டர் கொள்கலனில் அடைக்கப்பட்டே இந்த மோசடி வர்த்தகம் இதுவரைகாலமும் நடத்தப்பட்டு வந்திருக்கின்றது 

இந்த போலி நெய்யானது  பிரியாணி, பிரைட் றையில் மற்றும் பல உணவுப்பொருட்கள் சமைப்பதற்கான உள்ளடக்க சேர்மானமாக  பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது மாத்திரமன்றி மத தலங்களின் முன்பாக நெய் எனவும்  விற்பனை செய்யப்பட்டு வந்தமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் புறக்கோட்டை நெய் உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் பல்வேறு  நிலையங்களில் மேற்கொண்டு சோதனைகளில் ஈடு பட்டு, அவர்களிடமிருந்து பெறப்பட்ட மேலும் ஏழு மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதே வேளை  சில வாரங்களுக்கு முன்னர் மிருக உணவுக்கென கொள்வனவு செய்யப்பட்ட  மனித பாவனைக்கு உதவாத 15 மெற்றிக் தொன் பால்மாவினை  வரக்காப்பொல பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் பக்கெட்டுகளில் அடைத்து மனித பாவனைக்கென விற்பனை செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டனர்.

குறிப்பிட்ட வர்த்தகருக்கு எதிராக துல்கிரிய  நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது, நீதி மன்றம் 10 ஆயிரம் அபராத தொகையை விதிக்கப்பட்டதோடு குற்றவாளிக்கு  10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கடூழிய சிறை தண்டனையும்  விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் குறிப்பிட்ட தொகையான மிருக உபயோகத்திற்கான பால்மா,  நீதவானின் முன்னிலையில் வரக்கப்பொல  பிரதேச சபையின் பூரண ஒத்துழைப்புடன் முற்றாக அழிக்கப்பட்டது.

மேலும் மிருக பாவனைக்கென  கொள்வனவு செய்யப்பட்டு முழு ஆடை பால்மா என பக்கட்டுக்களில் அடைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நுகர்வோர் அதிகார சபையினால் உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்ட போது 160 மெற்றிக் தொன் மா அகப்பட்டது. இந்த வர்த்தகருக்கு எதிராக குளியாப்பிட்டிய மஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டதுடன்  நீதிமன்றத்தினால் குறிப்பிட்ட தொகையான மா முத்திரை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4876,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11148,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3250,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: நெய் எனக்கூறி மிருகக்கொழுப்பை விற்றுவந்த வர்த்தகர் மடக்கி பிடிப்பு
நெய் எனக்கூறி மிருகக்கொழுப்பை விற்றுவந்த வர்த்தகர் மடக்கி பிடிப்பு
https://1.bp.blogspot.com/-38SnDbYViJE/XIKfaqxTs4I/AAAAAAABUXg/tk4kuGjmpmwgQxvTeZnKHPkq29EbvS2QwCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-38SnDbYViJE/XIKfaqxTs4I/AAAAAAABUXg/tk4kuGjmpmwgQxvTeZnKHPkq29EbvS2QwCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2019/03/fake.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2019/03/fake.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy