தீ விபத்தில் முழுமையாக எரிந்து நாசமாகிய வீடு

அம்பலங்கொட, கந்தேகொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டு வீடு முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக  எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

நேற்று இரவு 8.30 இற்கும் 09.30 மணிக்கும் இடையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுதது பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயினை கடுப்படுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

தாயும் மகளும் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ள போதிலும் தீ விபத்து எற்பட்ட போது வீட்டில் யாரும் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 

தீயிற்கான சரியான காரணம் கண்டறிப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

தீப்பரவலினால் எவ்வித உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லை என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தீ விபத்தில் முழுமையாக எரிந்து நாசமாகிய வீடு தீ விபத்தில் முழுமையாக எரிந்து நாசமாகிய வீடு Reviewed by Vanni Express News on 3/02/2019 04:03:00 PM Rating: 5