நுவரெலியாவில் இரு வியாபார நிலையங்களில் தீ

- க.கிஷாந்தன்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - கண்டி பிரதான வீதி, பழையக் கடை பகுதிக்குச் செல்லும் வழியிலுள்ள இரு வியாபார நிலையங்களில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, அந்நிலையங்கள் முற்றுமுழுதாகத் தீக்கிரையாகியுள்ளன.

திடீர் தீ விபத்தில் அணிகலன்கள் விற்பனை நிலையமொன்றும், புதிததாக திறக்கப்படவிருந்த உணவகமொன்றுமே இவ்வாறு முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளன.

இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

பிரதேச பொது மக்கள், நுவரெலியா பொலிஸார், மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

ஏற்பட்ட தீ காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நுவரெலியாவில் இரு வியாபார நிலையங்களில் தீ நுவரெலியாவில் இரு வியாபார நிலையங்களில் தீ Reviewed by Vanni Express News on 3/11/2019 05:34:00 PM Rating: 5