கொள்ளுப்பிட்டி சந்தியில் இன்று அதிகாலை வெடிப்பு சம்பவம் - 11 வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொள்ளுப்பிட்டி சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் 11 வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இன்று (08) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் 03 வர்த்தக நிலையங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த வெடிப்பு சம்பவத்தால் சீன நாட்டுப் பெண் ஒருவர் உட்பட மேலும் இரண்டு பேர் சிறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கொள்ளுப்பிட்டி பொலிஸார், பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் சயெ்யும் பிரிவினர் இணைந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி சந்தியில் இன்று அதிகாலை வெடிப்பு சம்பவம் - 11 வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் இன்று அதிகாலை வெடிப்பு சம்பவம் - 11 வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு Reviewed by Vanni Express News on 3/08/2019 04:12:00 PM Rating: 5