விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் நேற்றுமுன்தினம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் இருந்த 149 பயணிகள் உள்பட 157 பேரும் உயிரிழந்தனர். 

இந்நிலையில், துரதிர்ஷ்டவசமான இந்த விபத்தில் சிக்கிய அந்த விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டதாக எத்தியோப்பியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதில் பதிவாகியுள்ள விமானியின் உரையாடல்களை வைத்து விபத்துக்கான காரணம் என்ன? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு Reviewed by Vanni Express News on 3/13/2019 12:23:00 AM Rating: 5