2018 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா

- Ibnu Asad

தேசத்தின் ஆதரவாளர்கள் சங்கத்தின் 4ம் வருடப் பூர்த்தியை முன்னிட்டு 2018 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா 2019.02.23 ம் திகதி ஸாதாத் மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக அதுரலிய பிரதேச சபை உறுப்பினர் சமீம் இக்பால் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் ஸாதாத் மகா வித்தியாலயம், அல் ஹுதா கனிஷ்ட வித்தியாலயம், அஸ்ஸபா மகா வித்தியாலயம், அல்மினா மகா வித்தியாலயம், கனகலாகம கனிஷ்ட வித்தியாலயம், ஹுலந்தாவ கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் சித்தியடைந்த ஆறு மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், ஸாதாத் மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந் நிகழ்வில் ஸாதாத் மகா வித்தியாலய அதிபர், அல் ஹுதா கனிஷ்ட வித்தியாலய அதிபர், கனகலாகம கனிஷ்ட வித்தியாலய அதிபர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
2018 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா 2018 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா Reviewed by Vanni Express News on 3/01/2019 11:17:00 PM Rating: 5