கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது

கடந்த 10 நாட்களில் தங்கத்தின்‌ விலை சவரனுக்கு 832 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமிற்கு 11 ரூபாய் விலை குறைந்து 3 ஆயிரத்து 126 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88 ரூபாய் விலை இறங்கி 25,008 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 20-ஆ‌ம் தேதி தங்கம் இதுவரை இல்லாத அளவாக ஒ‌ரு கிராம் 3 ஆயிரத்து 230 ரூபாய்க்கு விற்பனையானது. 

இந்நிலையில் இப்போது கிராமுக்கு சுமார் 100 ரூபாய் குறைந்திருக்கிறது. 

இன்று வெள்ளியின் விலையும் கிராமிற்கு 50 காசுகள் குறைந்து 42 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது Reviewed by Vanni Express News on 3/02/2019 11:48:00 PM Rating: 5