சத்திரச் சிகிச்சை அறையில் தாதியை தாக்கிய வைத்தியர்

சத்திரச் சிகிச்சை வைத்தியர் ஒருவரால் தாதியொருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை முன்னிறுத்தி குருநாகல் பொது வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சத்திரச் சிகிச்சை மேற்கொண்டிருந்த வைத்தியர் அங்கிருந்த உபகரணத்தால் அவரை தாக்கியுள்ள நிலையில், அதில் காயமடைந்த தாதி, வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் சிந்தன சஞ்சீவ எமது செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சத்திரச் சிகிச்சை அறையில் தாதியை தாக்கிய வைத்தியர் சத்திரச் சிகிச்சை அறையில் தாதியை தாக்கிய வைத்தியர் Reviewed by Vanni Express News on 3/13/2019 04:41:00 PM Rating: 5