யாருடைய வயிற்றிலும் அடிக்கவேண்டிய தேவை எமக்கில்லை - பிரதி தவிசாளர் ஜாஹீர்

- கலைமகன்

காரைதீவு பிரதேச சபை நேற்றைய அமர்வில் ஆறு ஊழியர்களின் இடைநிறுத்தம் தொடர்பாக பல சர்ச்சைகள் கிளம்பி இருக்கும் இவ்வேளையில் அது சம்பந்தமாக தெளிவு படுத்தும் ஊடக சந்திப்பு இன்று பிரதி தவிசாளர் கௌரவ ஏ.எம்.ஜாஹிர் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது. 

இங்கு கருத்து தெரிவித்த பிரதி தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் கடந்த 07 மார்ச் 2019ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வரும் இந்த ஊழியர்களின் சேவைக்காலம் முடிந்த பின்னர் இந்த பிரரேணை 12ஆம் சபை அமர்வுக்கு வந்திருந்தது. இந்த பிரேரணை கடந்த சபை அமர்வுக்கு கொண்டுவந்திருக்க வேண்டும் என்றார். மேலும் 

எஸ்.ஜெயராஜ் எனும் பதிலிட்டு காவலாளி எந்த ஒரு காவல் நிலையத்திலும் காவலாளியாக இயங்கவில்லை. அப்படி இருக்க அவரின் சேவைக்காலத்தை எப்படி நீடிக்க முடியும். பதிலிட்டு மின்னியலாளராக சேவையாற்றி வந்த எஸ்.ஸ்ரீதரன் எனும் சகோதரர் நேரசூசிக்கு ஏற்றால் போல செயற்படவில்லை. செவ்வாய் கிழமை வரவேண்டிய குறித்த நபர் இந்த சபையில் பேசிக்கொண்டிருந்த நேற்றைய தினம் வரை அவர் மாளிகைக்காடு வட்டாரத்திக்கு சேவைக்கு வரவில்லை அப்படி இருக்க எப்படி நான் அவருக்கு ஆதரவாக செயலாற்ற முடியும் என்றார். புதிய ஊழியர்களை சேர்க்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் அதுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம். யாரையும் இடை நிருத்த போவதில்லை. 

தொடர்ந்து பேசிய அவர் காரைதீவை சேர்ந்த நிஷா எனும் சகோதரி பலவருடங்களாக சேவையாற்றி வந்த நிலையில் சபை அனுமதி பெறாமல் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது இலக்கு.  அதட்கான போராட்டமே இது அந்த சகோதரிக்கு நடந்த அநீதிக்கு நீதி கிடைக்குமானால் நிச்சயம் நாங்கள் ஆதரவு கொடுக்க தயாராக இருக்கிறோம். 

இது அரசியல் செய்ய வேண்டிய இடமும் இல்லை. அரசியல் செய்யும் விடயமும் இல்லை. மனிதாபிமான அடிப்படையில் நாம் செயட்பட தயார் சகோதரி நிஸாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதுக்கான முன்னெடுப்பே இது. சகோதரி நிஷா உட்பட ஏனைய ஆறு ஊழியர்களுடன் மொத்தம் எழுபேரையும் இணைத்து கொள்ள தயாராக உள்ளோம் என்றார். எந்த ஏழை மகனுக்கும் நாங்கள் அநீதி செய்ய மாட்டோம். அவர்களின் வயிற்றில் அடிக்கவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை என மேலும் தெரிவித்தார்.
யாருடைய வயிற்றிலும் அடிக்கவேண்டிய தேவை எமக்கில்லை - பிரதி தவிசாளர் ஜாஹீர் யாருடைய வயிற்றிலும் அடிக்கவேண்டிய தேவை எமக்கில்லை - பிரதி தவிசாளர் ஜாஹீர் Reviewed by Vanni Express News on 3/09/2019 03:25:00 PM Rating: 5