லிந்துளை நகர சபையின் தவிசாளர் ஐதேகவுடன் இணைவு

- சதீஸ்குமார்

தலவாக்கலை லிந்துளை நகர சபையின் தவிசாளர் அசோக்க சேபால நேற்று (12) பாராளுமன்ற வளாகத்தில் வைத்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக இணைந்து கொண்டார் 

அசோக்க சேபால கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியோடு இணைந்து செயல்பட்டு வந்தாலும் கட்சியில் அங்கிகாரம் கிடைக்காததன் காரணத்தினால் சில மாதங்களாக சுயாதீனமாக செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந் நிகழ்வின் போது பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஷாநாயக்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது. 
லிந்துளை நகர சபையின் தவிசாளர் ஐதேகவுடன் இணைவு லிந்துளை நகர சபையின் தவிசாளர் ஐதேகவுடன் இணைவு Reviewed by Vanni Express News on 3/13/2019 12:15:00 AM Rating: 5