ஏழைகளின் வாழ்வுக்கு கைகொடுத்த காரைதீவு சபை - விசேட கூட்டத்தில் அமைதியாக அரங்கேறிய உதவிகள்

- ஹுதா உமர்

காரைதீவு பிரதேச சபையின் விசேட சபை கூட்டம். இன்று (14.03.2019) காரைதீவு பிரதேச சபை கௌரவ தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதி தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் அவர்களை தவிர மற்றைய ஏனைய சகல உறுப்பினர்களும் பிரசன்னமாகி இருந்த குறித்த விசேட கூட்டத்தில் கடந்த மாதாந்த சபை அமர்வில் கௌரவ உறுப்பினர்களின் மூலம் நிராகரிக்கப்பட்ட ஆறு பதிலீட்டு ஊழியர்களின் கால நீட்டிப்பு பிரேரணை சம்பந்தமாக அலசி ஆராயப்பட்டது.

தலைமையுறை நிகழ்த்திய சபையின் தவிசாளர் அவர்கள் கடந்த சபையில் கொண்டுவரப்பட்ட அந்த ஆறு ஊழியர்களின் காலநீட்டிப்பு சம்பந்தமாக சபைக்கு வெளியில் பலவகையான வதந்திகளும், பொய்யான செய்திகளும் பரப்பப்பட்டுள்ளது. இந்த சபையில் எல்லோரும் மக்கள் பிரதிநிதிகளாக ஒன்றிணைந்து செயட்பட வேண்டியது அவசியம். தவிசாளருடன் இருக்கும் கருத்துமுரண்பாடுகளை கொண்டு யாரும் ஊழியர்களை பழிவாங்கிடாமல் இருக்கவேண்டியது அவசியம் என்றார். கௌரவ உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் முதலில் பேசிய கௌரவ உறுப்பினர்

எம்.எச்.எம். இஸ்மாயில் அவர்கள் நிறுத்தி வைக்கப்பட்ட ஊழியர்களை வேலைக்கு தொடர்ந்தும் நாம் காலத்தை நீட்டிப்பு செய்து அனுமதி வழங்க வேண்டும். யாரும் தொழில் ரீதியாக பாதிக்கப்பட கூடாது. கௌரவ உறுப்பினர்கள் ஊழியர்களால் மதிக்கப்பட வேண்டும். சில சமயங்களில் சில ஊழியர்கள் உறுப்பினர்களை மதிக்காமல் விட்டதால் தான் கடந்த சபையில் அவர்களுக்கு எதிராக அந்த பிரேரணை மாறியிருந்தது அவர்களின் குடும்பங்களின் நலன் கருதி நாம் அவர்களை பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றார்

தொடர்ந்து பேசிய கௌரவ உறுப்பினர் ஏ.ஆர்.எம்.பஸ்மீர்

சேவை செய்வதை விட ஊடகங்களுக்கு அறிக்கைகளை விடுவதையே சிலர் பிரதான குறிக்கோளாக இந்த சபையில் கொண்டுள்ளனர். இந்த ஊழியர்களின் காலநீட்டிப்பு என்பது இந்த சபைக்கு கடந்த அமர்வில் கொண்டுவரப்பட்டது முதல்தடவையல்ல இதுபோல பலதடவைகள் நாம் அனுமதி வழங்கி உள்ளோம்.இந்த ஆறு உறுப்பினர்களையும் தொடர்ந்தும் நாம் பணிக்கு இணைத்துக்கொள்ள வேண்டும் என்றார்

தொடர்ந்து பேசிய கௌரவ உறுப்பினர் நேசராசா அவர்கள்

கடந்த சபை அமர்வில் நான் குறித்த விடயத்தை எதிர்த்திருந்தாலும் அது எனக்கு பின்னர் மனக் கஷ்டமாகவே இருந்தது.என்பதுதான் உண்மை. அவர்களுக்கு நாங்கள் இதட்க்கும் முன்னர் பலதடவைகள் அவர்களுடைய காலநீட்டிப்புக்கு அனுமதி வழங்கி இருந்தோம்.இம்முறையும் அவர்களை சேவைக்கு இணைத்துக்கொள்ள நான் ஆதரவு தெரிவிக்கிறேன் என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய கௌரவ உறுப்பினர் முஸ்தபா ஜலீல் அவர்கள் 
என்னுடைய வாகனத்தில் ஏட்பட்ட கோளாறு காரணமாக கடந்த சபை அமர்வுக்கு நான் தாமதமாக வரவேண்டிய சூழ்நிலை ஏட்பட்டதால் குறித்த பிரேரணை வாக்கெடுப்பு முடிந்து தோல்வியை தழுவி இருந்தது உள்ளுராட்சி மன்ற சட்டத்தின் படி அந்த பிரேரணையில் குறுக்கிடமுடியாமல் போனமையால் அந்த விடயம் எனக்கு கவலையாக இருந்தது. நான் நேரத்துக்கு வந்திருந்தாள் 5:5 என்று அந்த பிரேரணை ஒருவிதமாக சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் அவர்களை தொடர்ந்தும் நாம் சேவைக்கு சேர்த்து கொள்ள வேண்டும் என்றார்.

கௌரவ உறுப்பினர் ஜெயராணி பேசும் போது 
மக்களுக்கு ஆதரவாக பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கும் போது அதை தடுப்பவர்கள் மக்களுடைய நலன் விரும்பாதவர்கள் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளே இல்லை.மக்கள் பிரதிநிதிகள் என்றால் மக்களுடைய குறைநிறைகளை அறிந்து செயலாற்ற வேண்டும். அந்த ஆறு குடும்பத்தின் கஷ்டநிலையையும் உயரிய சபையான இந்த சபை நன்றாக உணர்ந்து அவர்களை தொடர்ந்தும் பணியில் சேர்க்க வேண்டும் என்றார்.

அவருடைய உரையை தொடர்ந்து கடந்த சபை அமர்வில் குறித்த பிரேரணையை எதிர்த்து வாக்களிப்புக்கு விட காரணமாக அமைந்த கௌரவ உறுப்பினர் ஆறுமுகம் பூபாலரத்தினம் அவர்கள் உரையாற்றும் போது கடந்த சபையில் நடைபெற்ற விடயம் மனவேதனையான ஒரு விடயம். அவர்கள் பழிவாங்க நாங்கள் இங்கு வரவில்லை. அவர்களை பழிவாங்கவேண்டிய எந்த தேவையும் எங்களுக்கு இல்லை. எல்லோரும் மனிதாபிமான அடிப்படையில் செயட்பட வேண்டும். அதே போன்று ஊழியர்களும் தங்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். நான் தொடர்ந்தும் அவர்களை பணிக்கு இணைக்க என்னுடைய ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த கௌரவ உறுப்பினர் மோகணதாஸ் அவர்கள் இது காரைதீவு பிரதேச அரசாங்கம். இந்த அரசாங்கத்தில் எல்லாம் தீவிரமாக ஆராயப்படும். அந்த ஆறு பதிலீட்டு ஊழியர்களையும் பணியில் இணைக்க நான் ஆதரவு தருகிறேன். சில ஊழியர்கள் எங்கள் வீடுகளுக்கு வந்து எங்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள் அவர்கள் முதலில் உண்மை நிலைகளை அறிய வேண்டும். கௌரவ உறுப்பினர் ஜெயராணி அவர்கள் எங்களுடைய சிறப்புரிமைக்கு கலங்கம் வரும்வகையில் பேசுவதை நிறுத்தவேண்டும். இல்லாது போனால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். ஒரு சில ஊழியர்கள் கேவலமாக நடக்கிறார்கள்.என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய கௌரவ உறுப்பினர் முஹம்மட் ரணீஸ் அவர்கள் கடந்த மாதாந்த அமர்வுக்கு நான் சுகயீனம் காரணமாக நேரதாமதமாக வந்ததால்.என்னால் எதுவும் செய்ய முடியாமல் ஆகி விட்டது. ஒரு பிரதேச சபை இயக்குபவர்கள் ஊழியர்களே, அவர்கள் இல்லாமல் எதுவும் இல்லை. அவர்களின் சேவை அளப்பரியது அவர்கள் இல்லாது போனால் நிலை மோசமாகி இந்த சபையே சீர் கெட்டுவிடும். 

மூன்று மின்னியலாளர்கள் 1000 கணக்கான மின்தூண்களில் பணியாற்றவேண்டிய தேவை இருக்கிறது இப்போது காட்டு யானைகளின் தொல்லை அதிகமாகி இருப்பதால் நாம் பொறுமையுடன் செயட்பட வேண்டியுள்ளது. இந்த ஆறு உறுப்பினர்களின் நிலை உண்மையில் பரிதாபமானது. மாவடிப்பள்ளி வாசிகசாலையில் நிலை எப்படி இருக்கிறது என்று நாம் பார்க்க வேண்டும். உடனடியாக இவர்களை பணிக்கு அமர்த்த நாம் முடிவுசெய்வோம் என்றார்

தொடர்ந்து பேசிய கௌரவ உறுப்பினர் காண்டிபன் அவர்கள் இந்த ஆறுபேரின் இழப்பால் எனக்கும் ஒழுங்கான தூக்கம் கூட இல்லை. இன்று என்னால் நிம்மதியாக உறங்க முடியும் என நம்புகிறேன் என்றார். அவர்கள் எல்லோரும் எங்கள் பிரதேச சபையின் குடும்ப பிள்ளைகள் அவர்களின் இழப்பு கவலையான ஒன்று. அவர்கள் இந்த ஆறு ஏழு நாட்களும் கடுமையாக அலைந்து திரிந்திருப்பார்கள் . எமது சபையின் ஊழியர்களின் வயிற்றில் அடிக்க நான் இந்த சபையில் இருக்கும் வரை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றார்

கௌரவ உறுப்பினர்கள் பேசுகின்ற போது எமது உறுப்பினர்கள் விடும் தவறை மன்னித்து நாம் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்ற உரைக்கு மன்னிப்பு மட்டுமல்ல தண்டனை கூட வழங்க வேண்டி வந்தால் வழங்க வேண்டும் என சபை தவிசாளர் தெரிவித்தார்.தொடர்ந்தும் தனது உரையில் எமக்காக சேவை செய்யும் எமது ஊழியர்கள் மதிக்கப்பட வேண்டும். விடுமுறை நாட்களில் கூட. இங்கே அவர்கள் வேலை செய்கிறார்கள். கடந்த வெள்ளி கிழமை கௌரவ உறுப்பினர் மோகனதாஸ் அவர்கள் இந்த ஊழியர்களின் விடயமாக . இந்த சபையை கூட்ட சொன்னார். கௌரவ உறுப்பினர்களான மோகன்,முஸ்தபா ஜலீல்,கான்டிபன்,ஏ.ஆர்.எம். பஸ்மீர். ஜெயராணி ஆகியோர்கள் இதற்க்கு ஆதரவு தெரிவிக்க உங்களின் அவசர முன்னெடுப்பால் அந்த ஆறு உறுப்பினர்களின் பின்னாட்களில் அவர்கள் பெற இருக்கும் அனுகூலங்கள் போது ஏட்படும் சிக்கல்களில் இருந்து தப்பித்து கொண்டார்கள். எல்லோரும் இணைந்து மக்களுக்கான பணியை செய்யுங்கள். கௌரவம் என்பது குடுத்து வாங்குவது. அது தானாக வராது.

தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெற்ற போது சகலரும் ஒவ்வொருவராக ஆதரவு தெரிவிக்க ஏகமனதாக குறித்த பிரேரணை நிறைவேற்றபட்டது. இன்றைய விசேட சபையை வேள்வி மகளிர் அமைப்பினரும் ஊழியர்களும் சபை விருந்தினர் பகுதியில் இருந்து கவனித்தனர்.
ஏழைகளின் வாழ்வுக்கு கைகொடுத்த காரைதீவு சபை - விசேட கூட்டத்தில் அமைதியாக அரங்கேறிய உதவிகள் ஏழைகளின் வாழ்வுக்கு கைகொடுத்த காரைதீவு சபை - விசேட கூட்டத்தில் அமைதியாக அரங்கேறிய உதவிகள் Reviewed by Vanni Express News on 3/14/2019 03:07:00 PM Rating: 5