கிளிநொச்சி முகமாலைக்கு நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் அடங்கிய குழுவினர் விஜயம்

- பாறுக் ஷிஹான்

நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் அடங்கிய குழுவினர் கிளிநொச்சி முகமாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். 

 இன்று (6) முற்பகல்   குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை பார்வையிட்டிருந்ததுடன்  நோர்வே அரசாங்கத்தின் உதவியுடன் எதிர்காலத்தில் இப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் இக்குழுவினரின்   விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விஜயத்தின்போது ஊடகங்களிற்கு நோர்வேயின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேரியன் ஹேகன் கருத்துத் தெரிவித்தபோது 

 இப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக நோர்வே அரசாங்கம் இலங்கைக்கு 3 ஆண்டுகளிற்கு உதவ உள்ளதாகவும்  இவ்விடயம் தொடர்பில் பிரதமரிற்கு நோர்வே அரசு வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் குறுகிய காலப்பகுதிக்குள் கண்ணிவெடிகளை அகற்றி  முடிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும்  மிகவும் பயங்கரமான வெடிபொருட்கள் அப்பகுதியில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி முகமாலைக்கு நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் அடங்கிய குழுவினர் விஜயம் கிளிநொச்சி முகமாலைக்கு நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் அடங்கிய குழுவினர் விஜயம் Reviewed by Vanni Express News on 3/06/2019 10:39:00 PM Rating: 5