கல்வியிலும் விளையாட்டிலும் அறபா மகா வித்தியாலயம் பெரும் புகழ் காண வாழ்த்துகிறேன் - மஸ்தான் M.P

- ஊடகப்பிரிவு.

கல்வியிலும் விளையாட்டிலும் அறபா மகா வித்தியாலயம் பெரும் புகழ் காண வாழ்த்துகிறேன். வருடாந்த இல்ல விளையாட்டு பரிசளிப்பு விழாவில் கெளரவ காதர் மஸ்தான் பெருமிதம்.

கல்வியிலும் விளையாட்டிலும் இந்த அறபா மகா வித்தியாலயம் கண்டு வரும் சாதனைகளை கண்டு புளகாங்கிதம் அடைகிறேன்,இதற்கு பின்புலமாய் நின்று செயற்படும் அதிபர் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னால்  பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் குறிப்பிட்டார். 

வவுனியா புளிதறித்த புளியங்குளம் அறபா மகா வித்தியாலயத்தின்  "கேட்போர் கூட அடிக்கல் நாட்டு விழாவும் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வும்" இன்று பாடசாலை மைதானத்தில்  அதிபர் எஸ்.புகாரி தலைமையில் கோலாகலமாக நடைபெற்ற பொழுது சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பொழுதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது,

எனது குறுகிய கால அமைச்சுப் பதவியில் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுக்காக பல மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளேன்.

இனமத கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் நின்று மனித நேயமிக்க மக்கள் சேவைகளை நாம்  ஆற்றியிருப்பதை இங்கே பெருமிதத்துடன் குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன் எனவும் குறிப்பிட்டார். 

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் கெளரவ றிஷாத் பதியுதீன் மற்றும் வவுனியா கல்விப் பணிமனையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கல்வியிலும் விளையாட்டிலும் அறபா மகா வித்தியாலயம் பெரும் புகழ் காண வாழ்த்துகிறேன் - மஸ்தான் M.P கல்வியிலும் விளையாட்டிலும் அறபா மகா வித்தியாலயம் பெரும் புகழ் காண வாழ்த்துகிறேன் - மஸ்தான் M.P Reviewed by Vanni Express News on 3/01/2019 11:05:00 PM Rating: 5