புத்தளம் குப்பை பிரச்சினை - எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் காரியாலயத்தில் சற்றுமுன் புத்தளம் குப்பை பிரச்சினை சம்மந்தமான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெவித்தார்.

குறித்த பேச்சுவார்த்தையில் புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தை நிரந்தரமாக நிறுத்தவில்லை என்றாலும் தற்காலிகமாக சரி நிறுத்தி தாருங்கள் என்ற கோரிக்கையை ஐக்கிய சமாதான முன்னனியின் தலைவர் - ஐ.என்.எப்.மிப்ளால் (மௌலவி) முன்வைத்துள்ளார்.

இந்த பிரச்சினை சம்மந்தமாக எமது பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பேசுவார்கள் என்றும் இது தொடர்பாக தான் கவனம் செலுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெவித்தார்.

புத்தளம் குப்பை பிரச்சினை - எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை புத்தளம் குப்பை பிரச்சினை - எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை Reviewed by Vanni Express News on 3/13/2019 05:19:00 PM Rating: 5