முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக பொய்ப்பிரசாரம் - அஸாப் அஹமட் குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணையில்

முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக பொய்ப்பிரசாரம் மேற்கொண்ட அஸாப் அஹமட் என்ற நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணையில்

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொய் மற்றும் அவதூறு செய்திகளை பரப்பி வந்த   முக்கிய புள்ளியான பேருவளையைச் சேர்ந்த அஸாப் அஹ்மத் என்ற நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால்  (CCD - Colombo Crime Division) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அண்மையில் துபாயில் கைது செய்யப்பட்ட மதூஷ் மற்றும் கஞ்சிபானை இம்ரான் என்பவா்களோடு தொடர்பு படுத்தி முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக சமூக ஊடகங்களில் திட்டமிட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

“ட்ரூ முஸ்லிம்” என்ற  வட்ஸ்அப் குழுமத்தை நடாத்தி வரும் பேருவளையைச் சேர்ந்த அஸாப் அஹமட் என்ற நபரே இந்த பொய் மற்றும் அவதூறு பிரசாரத்தை பரப்பி வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேருவளையைச் சேர்ந்த மஹிந்த சார்பு   கும்பல் ஒன்றே இந்த அவதூறு பிரசாரங்களின்  பின்னணியில் இருந்து செயற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாதாள உலகத்துடன் தன்னை தொடர்பு படுத்தி பரப்பப்பட்ட இந்த  அவதூறு பிரசாரத்தின் மூலமாக தன்னை ஏனைய குழுக்கள் இலக்கு வைப்பதற்கு சந்தா்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருப்பதாகவும்,  தனக்கு  மரண அச்சுறுத்தல் ஒன்றை ஏற்படுத்துவதற்கு குறித்த  அரசியல் சக்திகள் திட்டமிட்டே இந்த பிரசாரத்தை பரப்பி வந்ததாகவும்  முஜீபுர் றஹ்மான்  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடொன்றை அண்மையில் பதிவு செய்திருந்தார்.
முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக பொய்ப்பிரசாரம் - அஸாப் அஹமட் குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணையில் முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக பொய்ப்பிரசாரம் - அஸாப் அஹமட் குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணையில் Reviewed by Vanni Express News on 3/15/2019 05:22:00 PM Rating: 5