நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் - 49 பேர் பலி - தாக்குதல்தாரி நீதிமன்றில் ஆஜர்


நியூஸிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் டர்ரன்ட் என்னும் 28 வயதான அவுஸ்திரேலியர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

அதையடுத்து, பிரென்டனை காவலில் வைப்பதற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ம் திகதிக்கு ஒத்திவைத்தனர். 

பிரென்டன் டாரன்ட் மீது மற்ற குற்றச்சாட்டுகள் விரைவில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இவரை தவிர்த்து இன்னும் இரண்டு பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவர்கள் இதற்கு முன்னர் குற்றம் புரிந்ததற்காக பதிவு ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தில், பிரென்டன் டாரன்ட் ஆஜர்படுத்தப்பட்டதால், நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

பள்ளிவாசல் தாக்குதலில் காயமடைந்த 4 வயது குழந்தை உள்பட 42 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் - 49 பேர் பலி - தாக்குதல்தாரி நீதிமன்றில் ஆஜர் நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் - 49 பேர் பலி - தாக்குதல்தாரி நீதிமன்றில் ஆஜர் Reviewed by Vanni Express News on 3/16/2019 12:51:00 PM Rating: 5