பொது மக்களுக்கான ஓர் அவசர செய்தி

போதை பொருள் பாவனை தொடர்பில் தகவல் வழங்குவதற்கு புதிய தொலைபேசி அழைப்புக்கள் காவற்துறை தலைமையகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் போதை பொருள் நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய இவ்வாறு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்றைய தினம் தொடக்கம் 0113 024 820, 0113 024 848 மற்றும் 0113 024 850 இலக்கங்களுக்கு போதை பொருள் பாவனை தொடர்பில் தகவல் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கான ஓர் அவசர செய்தி பொது மக்களுக்கான ஓர் அவசர செய்தி Reviewed by Vanni Express News on 3/07/2019 02:08:00 PM Rating: 5