இன்று காலை நாடு திரும்பிய ஜனாதிபதி

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கென்யாவிற்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார். 

கடந்த புதன்கிழமை உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கென்யாவிற்கு பயணமாகியிருந்த ஜனாதிபதி, இன்று (17) காலை நாடு திரும்பியுள்ளார். 

நைரோபியில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார். குறித்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அதனைத்தொடர்ந்து கென்யா ஜனாதிபதி உஹூரு கென்யாடாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். 

அதன்பின்னர் நேற்று முன்தினம் கென்யாவில் வாழும் இலங்கை தமிழர்களை சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை நாடு திரும்பிய ஜனாதிபதி இன்று காலை நாடு திரும்பிய ஜனாதிபதி Reviewed by Vanni Express News on 3/17/2019 12:35:00 PM Rating: 5