ஜனாதிபதியின் தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை - மரண தண்டனை வழங்கப்படுவது உறுதி

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லையெனவும், எந்த எதிர்ப்பு வந்தாலும் அதனை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இன்று (06 )இடம்பெற்ற சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

ஐரோப்பா சங்கத்தினதோ, வேறு நிறுவனங்களினதோ எதிர்ப்புக்கள் வந்தாலும், நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். 
ஜனாதிபதியின் தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை - மரண தண்டனை வழங்கப்படுவது உறுதி ஜனாதிபதியின் தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை - மரண தண்டனை வழங்கப்படுவது உறுதி Reviewed by Vanni Express News on 3/06/2019 11:35:00 PM Rating: 5