அனைத்து அரசியல் கட்சிகளினதும் சொத்து விபரங்கள் வௌியிடப்படும்

அனைத்து அரசியல் கட்சிகளினதும், சொத்து விபரங்களை எதிர்வரும் வாரம் தமது வலைத்தளத்தில் வௌியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. 

இது சம்பந்தமாக அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க கூறினார். 

சில அரசியல் கட்சிகளிடமிருந்து சிறந்த பதில் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார். 

அதன்படி கட்சியின் யாப்பு, கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கை மற்றும் அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் சபை உள்ளிட்ட தகவல்கள் வௌியிடப்படவுள்ளன.
அனைத்து அரசியல் கட்சிகளினதும் சொத்து விபரங்கள் வௌியிடப்படும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் சொத்து விபரங்கள் வௌியிடப்படும் Reviewed by Vanni Express News on 3/16/2019 12:42:00 PM Rating: 5