65 இலட்சம் மின்பாவனையாளர்களிடம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள்

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு 65 இலட்சம் மின்பாவனையாளர்களிடம் மின்சக்தி, எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நிலவும் காலநிலைக்கு மத்தியில் மின்சக்தி அமைச்சு எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மின்சார உற்பத்தி பகுதிகளில் உள்ள நீர்தேக்கத்தில் நீர் மட்டம் தற்பொழுது நாளாந்தம் குறைந்து வருகின்றது. இதன் காரணமாக அனல் மின் நிலையங்களை பயன்படுத்தப்படுகின்றது. இந்த நிலைமையின் காரணமாக அவசரமாக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கோ அல்லது மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கோ அவசியம் இல்லை. 

இந்த நிலைமையை புரிந்துகொண்டு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு 65 லட்சம் மின்பாவனையாளர்களிடம் கேட்டுகொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். 

நாளாந்தம் இரண்டு மின்குமிழ்களை பயன்படுத்தாதிருந்தால் மின்சாரத்தை சேமிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதனூடாக நாளாந்தம் 100 மெகா வேட்ஸ் மின்சாரத்தை சேமிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
65 இலட்சம் மின்பாவனையாளர்களிடம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் 65 இலட்சம் மின்பாவனையாளர்களிடம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் Reviewed by Vanni Express News on 3/12/2019 11:57:00 PM Rating: 5