25 வருட காலம் வாழ்ந்த இடத்தை காப்பாற்ற போராடும் மக்கள் களத்தில் சென்று பார்வையிட்ட றிப்கான் பதியுதீன்

25 வருடகாலமாக அரச காணிகளில் வாழ்ந்து வரும் நானாட்டான் இலந்தை மோட்டை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட தீவுப்பிட்டி கிராம  மக்கள் காணிகள் மற்றும் அடிப்படை வசதிகள்  இல்லாத நிலையில் தற்போது அரச தரப்புகளில் இருந்து தங்கள் குடியிருப்புகளுக்கு இடையூறு வழங்குவதாகவும் அங்கிருந்து வெளியேற்ற திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கான தீர்வினை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க கைத்தொழில் வாணிபம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக  செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் நேரில் சென்று மக்களை சந்தித்தார் 

இதன்போது தாங்கள் 25 வருடங்கள் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருவதாகவும் அண்மை காலமாக  பல இன்னல்களை அனுபவிப்பதாகவும் தெரிவித்தனர் இதனை தொடர்ந்து றிப்கான் பதியுதீன் அவர்கள் இது தொடர்பாக மேலிடங்களுக்கு தெரிவித்து அதற்கான தீர்வினை பெற்று தர நடவடிக்கைகளை எடுத்து தருவதாகவும் குறிப்பிட்டார் 

மேலும் இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் மன்னார் மாவட்ட திட்டப்பணிப்பாளர் முஜிபுர் ரகுமான் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 
25 வருட காலம் வாழ்ந்த இடத்தை காப்பாற்ற போராடும் மக்கள் களத்தில் சென்று பார்வையிட்ட றிப்கான் பதியுதீன் 25 வருட காலம் வாழ்ந்த இடத்தை காப்பாற்ற போராடும் மக்கள் களத்தில் சென்று பார்வையிட்ட றிப்கான் பதியுதீன் Reviewed by Vanni Express News on 3/06/2019 12:42:00 PM Rating: 5