ஹூசைனியாபுரம் மண்ணிற்கு நாம் கடமை பட்டுள்ளோம் - றிப்கான் பதியுதீன்

- ACM.Faisal

வருடா வருடம் அல்பலாஹ் விளையாட்டு கழகம் நடாத்தும் UPL சிநேகபூர்வ சுற்றுத் தொடர் இந்த ஆண்டும் மிகவும் சிறப்பாக (02,03,04) ஹூசைனியாபுரம் பாடசாலை மைதானத்தில் நடை பெற்றது.

நேற்று (04.03.2019) நடைபெற்ற இந்த சுற்றுத் தொடரின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கு பற்றி உரையாற்றிய கௌரவ அமைச்சரின் பிரத்தியோக செயளாலர் முன்னால் வடமாகாண சபை உறுப்பினர் தேசமாணியம் றிப்கான் பதியுதீன் அவர்கள்

"இந்த ஹூசைனியாபுரம் மக்களுக்கும் மண்ணுக்கும் நானும் எனது கட்சியின் தலைமை கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களும் கடமைப் பட்டுள்ளோம்"

என இதயம் நிறைந்ததாக உரையாற்றினார்.

தொடர்ந்து தனது உரையில் நீங்கள் எமக்கும் உங்களின் தலைவர் றிஷாட் பதியுதீனுக்கும் அவரது அரசியல் வெற்றிக்கும் பல்வேறு வழிகளிலும் பங்காற்றியுள்ளீர்கள் அதை எப்போதும் நாம் மறந்திட முடியாது.

உங்களின் தேவைகளை நாம் நிறை வேற்றி தருவதுடன் நன்றி உணர்வுடன் நடந்து உங்களில் ஒருவராக பணிபுரிவோம்.

மேலும் அல்பலாஹ் விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் தாகமாக இருக்கின்ற விளையாட்டு மைதானத்தின் காணியை சகோதரர் ACMC கட்ச்சியின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் தொழில் அதிபர் அலி சப்ரி அவர்களுடன் பேசி பெற்றுத் தருவதுடன் அதனை 300 லோட் கிரவலிட்டு செப்பணிட்டும் தருவோம் எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற UPL இறுதி நாள் நிகழ்வில் (04.03.2019) மன்னார் பிரதேச சபை முதல்வர் முஜாஹிர், மற்றும் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் நகரசபை உறுப்பினர் தொழிலதிபர் அலி சப்ரி, முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் Dr.இல்லியாஸ், மாந்தை உப்பு கூட்டுதாபன தலைவர் அமீன், மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் நௌபீல், லாபிர், ஆதிர், சனூஸ் ஆகியோருடன்

பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, பாடசாலை அபிவிருத்திச் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், மற்றும் அல்பலாஹ் விளையாட்டு கழக மூத்த உறுப்பினர்கள் ஊர்மக்கள் என பலரும் பங்கு கொண்டமை சிறப்பம்சமாகும்.

மேலும் இந்த இறுதி நாள் நிகழ்வில் அல்பலாஹ் அணியின் மூத்த உறுப்பினர் சகோதரர் ஜஹூபர் அவர்கள் தனது ஓய்வை அறிவித்ததுடன் அவரை அணியின் அத்தனை வீரர்களும் சிறப்பு மரியாதை செய்து கௌரவப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கவையாகும்.
ஹூசைனியாபுரம் மண்ணிற்கு நாம் கடமை பட்டுள்ளோம் - றிப்கான் பதியுதீன் ஹூசைனியாபுரம் மண்ணிற்கு நாம் கடமை பட்டுள்ளோம் - றிப்கான் பதியுதீன் Reviewed by Vanni Express News on 3/05/2019 02:25:00 PM Rating: 5