தூபி ஒன்றில் நின்று புகைப்படம் எடுத்து கைதான மாணவர்கள் விடுதலை

மிஹிந்தலை ரஜமஹா விகாரை பகுதிக்குட்பட்ட பழமைவாய்ந்த தூபி ஒன்றில் நின்று புகைப்படம்

எடுத்த குற்றச்சாட்டின்பேரில் இரண்டு மாணவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சுமார் இரு வாரத்திற்கு விளக்கமறியல் வைக்கப்பட்டது அறிந்ததே .

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், மாணவர்கள் இருவரும் இன்று 50,000 ரூபா தண்டப்பண அறவீட்டுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பிரதேச சட்டத்தரணி ஒருவர் மாணவர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜாராகி உள்ளார். அதேவேளை, குறிப்பிட்ட மாணவர்களின் வழக்கு தொடர்பிலான ஆவண வேலைகளில் ஷிராஸ் நூர்தீன் அவர்களின் சட்டத்தரணி குழு உதவிகளை செய்துள்ளது.

18 , 20 வயதான குறித்த மாணவர்கள் இருவரும் நிட்டம்புவ பகுதி பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் மூதூரை சேர்ந்தவர்கள்
தூபி ஒன்றில் நின்று புகைப்படம் எடுத்து கைதான மாணவர்கள் விடுதலை தூபி ஒன்றில் நின்று புகைப்படம் எடுத்து கைதான மாணவர்கள் விடுதலை Reviewed by Vanni Express News on 3/01/2019 04:28:00 PM Rating: 5