சம்பா மற்றும் நாட்டரிசிக்கு அதிக பட்ச சில்லறை

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் சம்பா மற்றும் நாட்டு அரிசிகளுக்காக அதிக பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பி. ஹரிசன் கூறியுள்ளார். 

அதன்படி ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் அதிக பட்ச சில்லறை விலையாக 80 ரூபாவும், சம்பா அரிசி ஒரு கிலோவின் அதிக பட்ச சில்லறை விலை 85 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சிறுபோகத்தில் இருந்து ஒரு கிலோ நாட்டு நெல் 40 ரூபாவாகவும், சம்பா நெல் ஒரு கிலோ 43 ரூபாவாகவும் கொள்வனவு செய்யப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். 

மேல் மாகாண கமநல அபிமன் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைக் கூறினார்.
சம்பா மற்றும் நாட்டரிசிக்கு அதிக பட்ச சில்லறை சம்பா மற்றும் நாட்டரிசிக்கு அதிக பட்ச சில்லறை Reviewed by Vanni Express News on 3/07/2019 05:40:00 PM Rating: 5