நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் - கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர்


நியூஸிலாந்தின் க்ரைஸ்ச்சர்ச்சில் 49 பேர் கொல்லப்பட்டதுடன், 40இற்கும் மேற்பட்டோர் காயமடைவதற்கு காரணமான தீவிரவாத தாக்குதல் குறித்து தாம் கவலையடைவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடுபம்பத்தினருக்கு ஜனாதிபதி தமது அனுதாபங்களையும் தெரிவிப்பதாக ட்விட்டர் தளத்தின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், க்ரைஸ்ச்சர்ச் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடுபத்தினருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் ட்விட்டர் தளத்தில் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் - கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் - கவலை வெளியிட்டுள்ள  ஜனாதிபதி பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் Reviewed by Vanni Express News on 3/16/2019 02:04:00 PM Rating: 5