நியூஸிலாந்து கொடூரத் தாக்குதல் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் வாழ்கையில் ஒவ்வொரு வாரமும் வரும் மகிழ்சியான தருணம். ஆனால் இன்று(15.03.2019) உலக முஸ்லீம்கள் அனைவர் மனதும் வலியாலும் கவலையாலும் காயப்பட்ட கறுப்பு தினமாக மாறியுள்ளது.

ஜூம்மா தினத்தில் சிறப்புத் தொழுகைக்காக வந்ததருணம்  பட பட வென பட்டாசு வெடிப்பது போல் துப்பக்கியுடன் பள்ளிவாசலினுல் நுழைகிறான் ஒரு பயங்கரவாதி (ஆனால் ஊடகங்களுக்கு மர்ம நபர்)

கருணை எனும் ஈரம் அற்ற அந்த கொடூரன் தாறுமாறாக பள்ளிவாசலின் உள் இருந்த அத்தனை பேரையும் சுட்டு வீழ்துகிறான். 

அவனது துப்பாக்கியில் தோட்டா தீர்ந்துவிடவே மீண்டும் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காரிற்குல் வந்து இன்னுமொரு துப்பாக்கியுடன் மறுபடியும் நுழைந்து பள்ளிவாசலின் முற்றத்தில் நின்றவர்களையும் சுட்டது மட்டுமல்லாமல். மீண்டும் பள்ளிவாசலுக்குள் நுழைந்து இறந்த உடலில் சிறிதளவேனும் உயிர் இருந்து விடுமோ என்று மீண்டும் சுடுகிறான்.

நியூஸிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர் பள்ளிவாசல் மற்றும் லின்வூட் அவென்யூ இஸ்லாமிய நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால் முஸ்லிம் உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் இதுவரை சுமார் 49 நபர்கள் உயிரிழந்ததாகவும் சிறுவர்கள் உட்பட 48 பேர் காயப்பட்டதாக அந்நாட்டு ஊடங்கங்கள் அறிவித்துள்ளது. 

மேலும் அதிகப்படியான சேதத்தை ஏற்படுத்த இக்குற்ற செயலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பள்ளிவாசல் அருகில் நிறுத்தி வைத்த கார்களில் ஏராளமான வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தது அதிர்ச்சியளிக்கிறது. 

இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களிக்கு எதிரான கண்மூடித்தனமான வெறுப்பின் வெளிப்பட்டால், நன்கு திட்டமிட்டு, வெள்ளிக்கிழமையில் சிறப்புத் தொழுகைக்கு முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு வருவார்கள் என்று அறிந்த இந்த மனித மிருகங்கள் இவ்வெறிச்செயலை வெள்ளிக்கிழமை ஜூம்ஆ நேரத்தில் அரங்கேற்றியுள்ளார்கள்.


நியூஸிலாந்து வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் என அந்நாட்டு பிரதமர் ஜசிண்டா ஆர்டன் அறிவிக்கின்றார். இத்தனை 
கொடூரச் செயலை செய்தவனது நோக்கம் நியூஸிலாந்தில் அகதிகளாக வந்த முஸ்லிம்கள் இருக்க கூடாது அவர்கள் தங்கள் வழிபாடுகளை நியூசிலாந்திற்குல் சுதந்திரமாக செய்யக்கூடாது என்பதே இத்தனை கொடூரச் செயலையும் தனது முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தி கொண்டே செய்கிறான்.

முஸ்லீம்கள் இது போன்ற செயல்களுக்கு அச்சப்பட்டு வீட்டோடு அடைந்துவிடுவார்கள் என்பது அவனது எண்ணம் 

நியூஸிலாந்து அரசும் மக்களை வீட்டில் இருக்கும் படியும் பள்ளிவாசலின் கதவுகளை மூடுமாறும் மீண்டும் எங்களது அறிக்கை வரும் வரை காத்திருக்கவும் என்றும் அறிவித்தது. 

இவ்வாறெல்லாம் தாக்குதல் நடத்துவதன் மூலம் இஸ்லாமியர்களை மிரட்டிப் பார்த்து விடலாம் என்று பயங்கரவாதிகள் எண்ணுகின்றனர் ஆனால் இன்றய தினமே 
நியூஸிலாந்தின் வீதி
யோரங்களில் ஐவேளை தொழுகையை ஜமாத்தாக நிறைவேற்றி இஸ்லாமியர்கள் இது போன்ற பயங்கரவாத செயல் எங்கள் மார்க்கப்பற்றை அணுவளவும் குறைத்து விடாது என்பதை உலகிற்கு பறைசாற்றியுள்ளார்கள் அல்லாஹு அக்பர்

அதுபோல இதுபோன்ற தாக்குதல்கள் மூலம் இஸ்லாம் இன்னும் பல மடங்கு வேகமாக வளருமே தவிர இத்தனை கால வன்முறை வெறியாட்டத்தின் மூலம் இஸ்லாமிய மார்க்கமும் அதனை பின்பற்றுவபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து போனதாக எங்குமே தகவல் இல்லை. 

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும்அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல்விட மாட்டான்.
(அல்குர்ஆன் 9:32)


இந்த கொடூர செயலை உலக நாடுகள் வன்மையாக கண்டிப்பதோடு இஸ்லாமிய மதத்திற்கும் முஸ்லீம்களுக்கும் எதிராக பரப்புரை செய்யப்படும் வெறுப்புப் பேச்சை தடை செய்ய வேண்டும் என்றும் இலங்கை அரசு இக்கொடூரச் செயலை வன்மையாக கண்டடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திகிறோம்.

முறையாக விசாரித்து, இதில் சம்பந்தப்பட்டோர் காவற்துறையின் குற்றவாளிகள் பட்டியலில் இருந்தார்களா என்று கண்டறியவேண்டும்.

நியூஸிலாந்தில் தடை செய்யப்பட்டுள்ள பயங்கர ஆயுதங்களும், வெடிபொருட்களும் இந்த பயங்கரவாதிகளுக்கு எவ்வாறு கிடைத்தது மட்டுமல்லாமல் முகநூலில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே அவன் தாக்குதல் நடத்துவதாக அறிக்கை விட்டும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்? என்று உடனே விசாரிக்க வேண்டும்.

இந்த குழுவினர் ஏதாவது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களா ?? மேலும் இது போன்ற கொடூரத் திட்டங்களை திட்டமிட்டுள்ளார்களா? என்று விசாரித்து அவர்களை உடனே தடை செய்யவேண்டும்.

முஸ்லிம் விரோத போக்கிற்கு வித்திட்ட ஊடகங்கள், அமைப்புகள் மற்றும் இஸ்லாமோபியா எனும் இஸ்லாமிய எதிர்ப்பு வாதம் குறித்து ஆய்வு செய்து அவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும்.

மேலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தி அதை நேரலை செய்யும் அளவிற்கு வெறி பிடித்துள்ள பயங்கரவாதியை கைது செய்து அவனுக்கு மரணதண்டனை அளிக்க வேண்டும்.

அப்பாவி மக்கள் மீது நடத்திய இந்த பயங்கரவாத வன்முறைச் செயலை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

இப்படிக்கு,
M.F.M பஸீஹ் M.I.Sc
செயலாளர்,
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்.
நியூஸிலாந்து கொடூரத் தாக்குதல் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் கண்டனம் நியூஸிலாந்து கொடூரத் தாக்குதல் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் கண்டனம் Reviewed by Vanni Express News on 3/15/2019 11:37:00 PM Rating: 5