பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டம்

பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஆசிரியர்-அதிபர் சேவையில் காணப்படுகின்ற சம்பள முரண்பாடு, 3 மாத காலத்தின் நிலுவைத்தொகையை வழங்காமை உள்ளிட் 36 பிரதான காரணங்களை முன்வைத்து சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதேவேளை நாட்டின் பிரதான நகரங்களில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்த உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறினார். 

நுகேகொட, பதுளை, பண்டாரகம, கண்டி, தங்காலை, புத்தளம், மொனராகலை, வெல்லவாய, மொறவக, ரத்தினபுரி உள்ளிட்ட 20 பிரதான நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.
பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டம் பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டம் Reviewed by Vanni Express News on 3/13/2019 02:28:00 PM Rating: 5